Kalaignar Kanavu Illam Thittam Apply Online 2025
Kalaignar Kanavu Illam Thittam Apply Online 2025 தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக, கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அனைத்து குடிமக்களும் இத்திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் தமிழ்நாட்டில் வீடற்றவர்களின் எண்ணிக்கையை குறைத்து, அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பை உறுதி செய்வதாகும். கலைஞர் கனவு இல்லத்திற்கான பலன்களைப் பெற, தகுதியான குடிமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
இப்பகுதியில் இத்திட்டத்திற்கான விவரங்களை பற்றி பார்க்கலாம்
Kalaignar Kanavu Illam Thittam Apply Online 2025
வீட்டின் விவரம்
- இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு 360 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கட்டப்பட வேண்டும். இதில் 360 சதுரடி.
- 300 சதுர அடியில் சிமென்ட் கூரையாகவும், மீதமுள்ள 60 சதுர அடியில் தீப்பிடிக்காத கூரையாகவும் பயனரின் விருப்பப்படி அமைக்க வேண்டும்.
- வீட்டின் சுவர் மண்ணால் செய்யப்படக்கூடாது. சுவர் செங்கல், இன்டர்லாக் கல்லால் செய்யப்பட வேண்டும்
- கட்டுமானச் செலவைக் குறைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டும் வீடு கட்டலாம்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- செல்போன் எண்
- வாக்காளர் அட்டை
- பான் கார்டு
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- குடும்ப அட்டை
- வீட்டு முகவரி
Kalaignar Kanavu Illam Thittam Apply Online 2025 தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பதாரர்கள் தகுதிக்கான அனுமதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயன்களைப் பெற தகுதியுடையவர்கள்.
- இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற விண்ணப்பதாரர்கள் செங்கல் மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட வீடு வைத்திருக்கக் கூடாது.