MINMATHI APP DETAILS
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட “மின்மதி 2.0” கைபேசி செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாக மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன், புதிய வடிவமைப்பு மற்றும் மக்களை கவரும் உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் இதழையும் வெளியிட்டார்.
சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத்திறனையும் மற்றும் நிதி மேலாண்மை திறனையும் மேம்படுத்த மின்மதி 2.0 கைபேசி செயலி, மின்கற்றல் தள (e-Learning platform) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், சமுதாய அமைப்புகள், மற்றும் அரசுத் திட்டங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகளை கேட்பொலி மற்றும் காணொளி வடிவங்களில் வழங்குகிறது.
MINMATHI APP DETAILS
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இந்த செயலியை பயன்படுத்தி, தங்களின் கைபேசி மூலம் தேவையான தகவல்களைத் தேடவும், தகுந்த தலைப்புகளில் கற்றுக்கொள்ளவும் முழுமையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமுதாய வளப் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும், மின்மதி 2.0 கைபேசி செயலி மூலம் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த செயலியின் மூலம் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்ச்சி அடையாளமாக மின் சான்றிதழ் (E-Certificate) வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயிற்றுநர்களின் திறமையும் செயல்திறனும் அதிகரிக்கிறது மற்றும் மகளிர் மேம்பாட்டின் நோக்கங்களும் மேலும் விருத்தி பெறுகின்றன.
Click here to install Minmathi App
தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் புதிய அப்டேட்; வெளியான முக்கிய அறிவிப்பு..!