TN Village Panchayat Clerk Job Details
TN Village Panchayat Clerk Job Details பஞ்சாயத்து அலுவலகம் என்பது கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளைச் சரியான முறையில் செயல்படுத்தும் முக்கியமான நிர்வாக மையமாகும். பஞ்சாயத்து அலுவலக வேலைகள் கிராமப்புற மக்கள் சேவைக்கு வழிவகுக்கும் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பொறுப்புகளை உடையன.
இந்த பணிகளில் உள்ள பதவிகள் பொதுவாக கிராம நிர்வாக உதவியாளர், கிளார்க், கணக்காளர், அலுவலக உதவியாளர் போன்றவை ஆகும். இவ்வேலைகளுக்கான தேர்வுகள் பொதுவாக தேர்ச்சி தேர்வு அல்லது எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் நடத்தப்படுகின்றன.
மேலும் இப்பகுதியில் நாம் பஞ்சாயத்து அலுவலங்களில் உள்ள தேர்வு இல்லாத பஞ்சாயத்து கிளார்க் பணிக்கான தகவல்களை பற்றி பார்க்கலாம்.
TN Village Panchayat Clerk Job Details Highlights
நிறுவனம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
வகை: தமிழ்நாடு அரசு வேலை
Role of Panchayat Clerk – பஞ்சாயத்து கிளார்க் பணிகள்
- கடமைகள் மற்றும் பொறுப்புகள் :-
- வரி கேட்புகளை தயாரித்தல் மற்றும் அனுப்புதல்
- ஊராட்சி வரி உள்ளிட்ட வருவாய் வசூல் மற்றும் ரசீது புத்தகங்கள் மற்றும் தொடர்புடைய இதர பதிவேடுகளை பராமரித்தல்
- அருவருக்கத்தக்க மற்றும் அபாயகரமான தொழில்களுக்கான கட்டணம் வசூலித்தல்
- ஊராட்சியின் சொத்து பதிவேடுகளை பராமரித்தல்
- ஊராட்சியின் மாதாந்திர கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்தல்
- கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல்
பணியின் பெயர்: பஞ்சாயத்து கிளார்க்
Qualfications of TN Village Panchayat Clerk
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு கல்வித் தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
- இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ 15,900 – ரூ 58,500 வரை வழங்கப்படும்
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது – 18 வயது, அதிகபட்ச வயது – 32 வயது
சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான தகுதிகள்..!
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- எழுத்துத் தேர்வு நடைபெறும், இதில் பொதுத் திறன்கள், கணிதம், தமிழ் மற்றும் ஆங்கிலம், கணினி அறிவு போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
- தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
- தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
- அனைத்து கட்டங்களின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்து கிளார்க் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர்கள் தங்களின் சொந்த மாவட்ட இணையதளத்தில் சென்று, விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் அந்த அறிவிப்பின் அடிப்படையில் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் அனைத்து தேவையான தகவல்களைத் எந்த தவறும் இல்லாமல் நிரப்ப வேண்டும், ஒவ்வொரு கல்வி சான்றிதழையும் இணைக்க வேண்டும்.
- விண்ணப்பக் காலம் முடிவடையும் முன்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், காலாவதியாகும் தேதிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
- சொந்த மாவட்ட இணையத்தளம் லிங்க்