தமிழக அரசு துறைகளில் 15,000 காலிப் பணியிடங்கள்; முழு விவரங்கள்..! TNPSC likely to fill 15000 vacancies in 2025 Check Now

TNPSC likely to fill 15000 vacancies in 2025

அரசு துறைகளில்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு வகைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை, ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும், அந்த ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகள் மற்றும் துறை வாரியாக நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.

TNPSC likely to fill 15000 vacancies in 2025
TNPSC likely to fill 15000 vacancies in 2025

போட்டித்தேர்வு அட்டவணை

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டித்தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற முக்கிய தேர்வுகள் குறித்த விவரங்கள் இடம்பெற உள்ளன.

இந்த அட்டவணை மூலம் மொத்தம் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அரசு துறைகளில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 10,701 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 15,000 பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு திட்டத்தில் 8,997 காலிப் பணியிடங்கள் – வெளியாகி உள்ள புதிய தகவல்..!

Leave a Comment