தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா… எதிர்பார்ப்பில் மாணவர்கள்..! Will Half Yearly Leave Extend for TN Schools 2025

Will Half Yearly Leave Extend for TN Schools 2025

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. எனினும் ஃபெஞ்சல் புயல் காரணமாக தேர்வுகள் தள்ளிப் போயின.

எனினும் தேர்வு விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதாவது  1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிச.23ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. டிச.24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜன.2) திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Will Half Yearly Leave Extend for TN Schools 2025
Will Half Yearly Leave Extend for TN Schools 2025

Half Yearly Leave Extend for TN Schools 2025

விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வியாழன், வெள்ளி என 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து வார இறுதியான சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. பின்பு திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கன்வாடி சூப்பர்வைசர் பணி – முழு விவரங்கள்..!

Leave a Comment